Saturday, April 18, 2015

எனது முதல்...

எனது முதல்... :

குழந்தை பருவத்திலிருந்து பாலகன் நோக்கி நகர்கிறது அகவை. நாவில் ஒரு சில சொற்களே ராகம் பாட பல சொற்கள் தாளம் போடும் தருணம் , இரு கைகள் என்னைப்பற்றி தனது தோல்களை இருக்கையாக்கி என்னை முதல் முறையாக உலகத்தை உயரத்தில் இருந்து காண்பித்த எனது முதல் நண்பன்...
நான் குழந்தை பருவத்திலிருந்து மெல்ல மெல்ல நடந்து கொண்டு செல்ல எனது நண்பன் தனது முதுமை பருவத்திலிருந்து குழந்தை பருவம் நோக்கி தவழ்ந்து கொண்டு இருக்கும் வேலையில் எங்களுக்குள் மலர்ந்தது நட்பு...
இணை பிரியா இருவரும் ஒன்றாகவே பல பாதைகள் நோக்கி பயணித்தோம். பல இடையூறுகள் பல பாடங்கள் பல புது அறிமுகங்கள். பகுத்தறிவு எனும் வாயிலுக்குள் நுழைய சில வருடங்கள் இருக்கையிலே......................................................................................................................................... ...................................................................................................................................................                                                       
................................................................................................................................................... 

தினமும் உறவாடிய சொற்கள் எனக்கு முதல் இருக்கையாய் இருந்த தோழ்கள் என்னை பயணத்தின் போது அழைத்து சென்ற அந்த கைகள்  என்னுடன் விளையாடிய முதல் நண்பன் எனக்கு உடற்பயிச்சியளித்த எனது முதல் ஆசான் என்னை பலர் முன்னிலையில் மேடையேற்றிய பேச்சாளர் அனைத்துமாய் இருந்த அந்த தோழமை பிரிந்து சென்றது மரணத்தின் வாயிலாக இந்த மண்ணுக்கு இரையாய் . தாத்தா வின் அன்பின் பிடியில் வளர்ந்த அணைத்து நண்பர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்...

No comments:

Post a Comment